COVID-19 (நாவல் கொரோனாவைரஸ்) - வாஷிங்டன் மாகாணத்திலுள்ள தகவல்கள், சேவைகள் மற்றும் ஆதாரங்கள்

COVID-19 பிரத்யேக தொலைபேசி எண்

COVID-19 குறித்து உங்களுக்கு கேள்விகள் இருந்தால் தயவுசெய்து 1-800-525-0127 என்ற எண்ணை அழைத்து # அழுத்தவும். அவர்கள் பதிலளிக்கையில், உங்கள் மொழியைச் சொல்லி மொழிபெயர்ப்பு சேவைகளைப் பெறலாம். பிரத்யேக எண் காலை 6 முதல் இரவு 10 வரை திங்கள் முதல் வெள்ளிவரையிலும், சனி ஞாயிறுகளில் காலை 8 முதல் மாலை 6 வரையிலும் திறந்திருக்கும்.

தற்போதைய புதுப்பித்தல்கள்

ஜூன் 26, 2020 தேதிப்படி, வாஷிங்டன் மாகாணத்திலுள்ள அனைத்து மக்களும், உள்ளரங்க பொதுவெளியில் இருக்கும்போதோ அல்லது திறந்தவெளியில் இருக்கையில் மற்றவர்களிடமிருந்து 6 அடி (2 மீட்டர்கள்) விலகியிருக்க இயலாதென்றாலோ முக மறைப்பை அணிவது அவசியம். மக்களில் சிலருக்கு நோய் நிலை காரணமாக முக மறைப்பை அணிவது பாதுகாப்பற்றதாக இருக்கலாம். அதற்காக நோய் இருப்பதை உறுதிப்படுத்த சான்று ஏதும் காட்டவேண்டியதில்லை. மேலும், அனைத்து முதலாளிகளும் மற்றவர்களுடன் சேர்ந்து பணியாற்றும் அனைத்து பணியாட்களுக்கும் முக மறைப்புகள் அல்லது முகக் கவசங்களை வழங்கவேண்டியது அவசியம்.

மே 31ல், அனைத்து எரிசக்தி, தரைவழி தொலைபேசி, மற்றும் நீர் பயன்பாடுகளுக்கான தாமதக் கட்டணங்கள் மற்றும் சேவை துண்டிப்புக்கான கடன் தவணையுரிமை காலத்தை ஜூலை 28 வரையிலும் ஆளுநர் Inslee நீட்டித்துள்ளார். குடியிருப்போர் தங்களது பயன்பாட்டு நிறுவனங்களை நேரடியாக அழைத்து அவர்களுக்கான கட்டணங்களைச் செலுத்துவதில் உதவியைக் கோர ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

மேலும் ஆளுநர் வெளியேற்றுவதற்கான இடைநிறுத்த காலத்தை ஆகஸ்ட் 1 வரையிலும் நீட்டித்துள்ளார். உங்கள் வீட்டு உரிமையாளர் அல்லது சொத்து மேலாளர் இடைநிறுத்தக்கால உரிமையை மீறினால், நீங்கள் மாகாண அரசு வழக்கறிஞர் அலுவலகத்தை (833) 660-4877 என்ற எண்ணில் தொடர்புகொண்டு எண் 1 தேர்வுசெய்து தகவலைத் தெரிவிக்கலாம். ஒரு அலுவலக உறுப்பினர் உங்கள் அழைப்புக்கு பதிலளிப்பார்.

COVID-19 என்றால் என்ன?

COVID-19 என்பது ஒரு சுவாச நோய். இது தும்மல்கள் மற்றும் இருமல்கள் மூலம் கைகுலுக்கல்கள், உணவு மற்றும் பானங்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் நெருங்கிய தொடர்பிலுள்ள மற்றவர்களுக்கு பரவுகிறது.

இதன் அறிகுறிகள் யாவை?

COVID-19 தொற்றின் முக்கிய அறிகுறிகளாக இருமல், மூச்சுத்திணறல் அல்லது காய்ச்சல், சுரம், மீண்டும் மீண்டும் ஏற்படக்கூடிய குளிர் நடுக்கம், தசை வலி, தலைவலி, தொண்டைவலி, சுவை அல்லது வாசனை உணர்வதில் புதிதாய்த் தோன்றும் இழப்பு இவற்றில் குறைந்தது ஏதேனும் இரு அறிகுறிகள் ஏற்படக்கூடும்.

அதிக அபாயத்தில் உள்ளவர் யார்?

வயதானோர், வயது குறைவாயிருப்பினும் பிற நோய் பாதிப்புள்ளோர், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் COVID-19 மூலம் தீவிர நோய்பாதிப்பு ஏற்படும் அதிக அபாயம் உள்ளது.

உங்களையும் உங்கள் சமூகத்தையும் காத்துக்கொள்ளுதல்:

 • முடிந்தவரை, குறிப்பாக உங்களுக்கு உடல் நலமில்லையெனில் வீட்டிலேயே இருங்கள்.
 • பொது இடத்தில் ஒரு முக மறைப்புத் துணியை பயன்படுத்துங்கள்.
 • மற்றவர்களிடமிருந்து ஆறு அடி (2 மீட்டர்கள்) தள்ளியிருங்கள்.
 • உங்கள் கைகளை அடிக்கடி கழுவுங்கள் அல்லது கை சுத்திகரிப்பானை பயன்படுத்துங்கள்.
 • உங்கள் இருமல்களையும் தும்மல்களையும் மூடிக்கொள்ளுங்கள்.
 • உங்கள் முகத்தைத் தொடாதீர்கள்.
 • உங்கள் வீட்டில் மேற்பரப்புகளை சுத்தம்செய்யுங்கள்.
 • உங்களுக்கு COVID-19 அறிகுறி இருந்தால், உங்கள் மருத்துவரை தொடர்புகொண்டு பரிசோதித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு மருத்துவர் இல்லையெனில், அருகிலுள்ள அவசர பராமரிப்பு மையத்தை தொடர்புகொள்ளுங்கள். உங்களுக்கு காப்பீடு இல்லையெனில், உங்கள் உள்ளூர் சுகாதாரத்துறையை தொடர்புகொள்ளுங்கள்.

ஆரோக்கியமாய் இருத்தல் மற்றும் COVID-19 பற்றிய கூடுதல் தகவல்களும் ஆதாரங்களும்:

மீண்டும் திறக்கும் வாஷிங்டன்: Safe Start Plan

COVID-19 பரவலைத் தடுப்பதில் உதவ ஆளுநர் Inslee வாஷிங்டனில் வசிப்போரை முடிந்தவரை வீட்டிலேயே இருக்கக் கேட்டுக்கொண்டுள்ளார். தொழில்களையும் நடவடிக்கைகளையும் மீண்டும் திறப்பதில் நான்கடுக்கு திட்டம் உள்ளது. ஒவ்வொரு மாவட்டமும் இந்த நான்கடுக்குகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளவற்றில் அடங்கிய முக்கிய செயல்பாடுகள்:

 • பலசரக்கு வாங்குதல், எரிபொருள் நிரப்புதல், மருந்துகள் வாங்க அல்லது மருத்துவ ஆலோசனைக்குச் செல்லுதல் போன்ற அத்தியாவசியச் செயல்பாடுகள்.
 • ஒரு அத்தியாவசிய தொழிலுக்கு அல்லது ஆளுநரின் Safe Start திட்டத்தின்கீழ் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்ட ஒரு தொழிலுக்கு பணியாற்றச் செல்லுதல்.
 • அருகிலுள்ள உணவுவிடுதியிலிருந்து உணவை எடுத்துச் செல்லுதல். 2 வது கட்டநிலையில் வரம்புக்குட்பட்டு அமர்ந்து சாப்பிடும் வசதி உணவு விடுதிகளில் அனுமதிக்கப்படும்.
 • உடல்ரீதியிலான இடைவெளியை ஆறு அடி (2 மீட்டர்கள்) பேணும்வரையிலும் வெளியில் நடைபயிற்சிக்கும் உடற்பயிற்சிக்கும் செல்லலாம். உங்கள் சமூகத்திற்கு வெளியே COVID-19 பரவும் வாய்ப்பைத் தவிர்க்க வீட்டுக்கு அருகிலுள்ள பகுதிகளில் பொழுதுபோக்கை பயன்படுத்தவும்.
 • மாகாண பூங்காக்களும் மீன்பிடித்தல், வேட்டையாடுதல் மற்றும் பிற பொழுதுபோக்கு நோக்கங்களுக்காகவும் பகல் பயன்பாட்டுக்கு திறந்துள்ளன. மாவட்டத்திலுள்ள மாகாண பூங்காக்களில் முகாமிடல்கள் குறைந்தது 2 வது கட்டத்தில் அனுமதிக்கப்படும்.

வேலைவாய்ப்பு & தொழில்கள் தொடர்பான வாய்ப்பு வளங்கள்

வேலையின்மை பலன்கள்

உங்கள் வேலையை இழந்துவிட்டால், உங்களுக்கு வேலையின்மை பலன்களுக்கு தகுதி இருக்கக்கூடும். வேலையின்மை பலன்களைக் கோரும் படிவத்தை நிரப்புவதில் உங்களுக்கு தகவல் தேவையெனில், நீங்கள் 1-800-318-6022 என்ற எண்ணை அழைக்கலாம். அவர்கள் பதிலளிக்கையில், உங்கள் மொழியைச் சொல்லி மொழிபெயர்ப்பு சேவைகளைப் பெறலாம்.

தொழிலாளிகளும் தொழில் உரிமையாளர்களும்

கொரோனாவைரஸ் தீவிர தொற்றினால் நமது மாகாணத்தில் பல நூறாயிரக்கணக்கான பணியாளர்களும் தொழில் உரிமையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்களை பாதுகாப்பாக வைத்திருக்க தொழில் உரிமையாளர்கள் செய்யவேண்டியது:

 • தொழிலாளிகள் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் COVID-19 தொற்று குறியீடுகள் மற்றும் அறிகுறிகளை அவர்களுக்கு கற்பிக்கவும்.
 • ஒரு சமூக இடைவெளி திட்டத்தை செயல்படுத்தவும்.
 • அடிக்கடி சுத்தப்படுத்தல் மற்றும் சுத்திகரித்தலை நடத்தவும்.
 • அடிக்கடியும் முறையாகவும் கைகளைக் கழுவுவதை உறுதிப்படுத்தவும்.
 • நோய்வாய்ப்பட்ட தொழிலாளிகள் வீட்டில் இருப்பதை உறுதிபடுத்தவும்.

உங்கள் பணியிட பாதுகாப்பு குறித்து உங்களுக்குக் கவலையிருந்தால், Department of Labor & Industriesஐ நேரடியாக 800-423-7233 என்ற எண்ணில் அழைத்து புகாரைப் பதிவுசெய்யலாம். தொலைபேசி மொழிபெயர்ப்பு வசதிகள் உள்ளன.

COVID-19 தொற்றுகாலத்தில் உங்கள் தொழில் மற்றும் தொழிலாளிகள் பற்றிய கேள்விகள் இருப்பின், வேலைவாய்ப்பு பாதுகாப்புத்துறையை 855-829-9243 என்ற எண்ணில் அழைக்கலாம்.

உடல் நலம் மற்றும் மருத்துவ காப்பீட்டு வாய்ப்புகள்

இலவச அல்லது குறைந்த செலவிலான மருத்துவக் காப்பீட்டுக்கு நீங்கள் தகுதிபெறலாம். 1-855-923-4633 என்ற எண்ணில் Health Care Authority யை அழைக்கவும். அவர்கள் பதிலளிக்கையில், உங்கள் மொழியைச் சொல்லி மொழிபெயர்ப்பு சேவைகளைப் பெறலாம்.

Alien Emergency Medical (AEM) பாதுகாப்பு என்பது அவசர மருத்துவ உதவி தேவைப்படும் குடியுரிமை அல்லது குடியேறுகைக்கான தேவைகளை பூர்த்திசெய்யாதோர் அல்லது 5 ஆண்டு தடுப்புக்காலம் பூர்த்தியாகாத தகுதிபெறும் தனி நபர்களுக்கான திட்டமாகும்.

நீங்கள் தகுதிபெறும் வெவ்வேறு உடல் நலத் திட்டங்கள் மற்றும் சேவைகளை அடையாளம் காணவும் விண்ணப்பிக்க உதவவும் 1-800-322-2588 என்ற பிரத்யேக எண்ணில் Help Me Grow வாஷிங்டனை அழைக்கலாம். இதில் அடங்குபவை:

 • WIC (பெண்கள், கைக்குழந்தைகள் & குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டம்)
 • குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வயதுவந்தோருக்கான மருத்துவக் காப்பீடு
 • பொறுப்பேற்கும் திட்டத்தின் மூலம் பிறப்புக் கட்டுப்பாடு
 • உடல் நலம் மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டு மருத்துவமனைகள்
 • கர்ப்ப காலத்தில் மற்றும் குழந்தைக்கு தேவையானவை
 • தாய்ப்பாலூட்டலுக்கான உதவி
 • இதில் உணவுத் திட்டங்களும் ஆதார வளங்களும் உள்ளன.

குடியேறியோர் மற்றும் அகதிக்கான தகவல்கள்

Office of Immigrant and Refugee Affairs (OIRA) COVID-19 குறித்தும், அரசுதவியை நம்பியிருத்தல் போன்ற குடியேறியோர் கவலைகளைப், பற்றி முக்கிய உண்மைகளை குடியேறியோர் புரிந்துகொள்ளவும் உதவுகிறது. தெரிந்துகொள்ள வேண்டிய மற்ற சில விஷயங்கள்:

 • மருத்துவமனைகளும் மருந்து இல்லங்களும் குடியுரிமை அல்லது குடியேற்ற நிலைகள் குறித்து ICE-யுடன் பகிர அனுமதியில்லை.
 • COVID-19 தொற்று பரிசோதித்துக்கொள்வதாலோ நன்கொடை பெறுவதாலோ அல்லது மருத்துவ பராமரிப்பு சலுகைபெறுவதாலோ கிரீன் கார்டுக்கு அல்லது குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதில் அவை பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
 • வேலையின்மை பலன்களுக்கு விண்ணப்பிக்க உங்களிடம் முறையான சமூக பாதுகாப்பு எண் இருக்கவேண்டும். வேலையின்மை பலன்களைப் பெறுவது குறித்து யாரிடமாவது நீங்கள் பேசவிரும்பினால் 1-800-318-6022 என்ற எண்ணில் அழைக்கலாம்.
 • அரசுதவியை நம்பியிருக்கும் நிலையின் விதிகளின்கீழ் கிரீன் கார்டு அல்லது குடியுரிமை விண்ணப்பிக்கும் உங்கள் திறனுக்கு வேலையின்மை பலன்களைப் பெறுதல் அச்சுறுத்தலாக அமையாது.
 • வாஷிங்டன் மாகாணத்தின் தொகை அளிக்கப்பட்ட குடும்பம் மற்றும் COVID-19 தொற்றினால் நோய்வாய்ப்பட்ட ஒருவரை பராமரிக்கவோ அல்லது வைரஸ் காரணமாக நீங்கள் நோய்வாய்ப்பட்டு உங்களை கவனித்துக்கொள்ள மருத்துவ விடுப்பு எடுக்கவும் நீங்கள் தகுதிபெறலாம். இந்த பலனைப்பெற உங்களுக்கு சமூக பாதுகாப்பு எண் தேவையில்லை. வேறு பலவகையான ஆவணங்களை ESD ஏற்கிறது.
 • நீங்கள் ஒரு தொழில் உரிமையாளராயிருந்து உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், மத்திய அரசின் Small Business Administration பேரிடர் கடனுக்கு விண்ணப்பிப்பது புதிய அரசுதவியை நம்பியிருக்கும் நிலை சட்டங்களின்கீழ் கிரீன் கார்டு அல்லது குடியுரிமைப்பு விண்ணப்பிக்கும் திறனுக்கு அச்சுறுத்தலாக இராது.

அரசுதவி பெறும் நிலை மீதான சிறப்புக் குறிப்பு: பல வழக்கறிஞர்கள் குடும்பங்கள் தகுதிபெறும் சேவைகளை தொடர்ந்து பயன்படுத்துவதை பரிந்துரைக்கிறார்கள். எனினும், ஒவ்வொரு குடியேறுகைச் சூழலும் தனித்துவமானது. உங்கள் அல்லது உங்கள் குடும்ப உறுப்பினரின் நிலைகுறித்து மற்றும்/அல்லது பலன்களைப் பயன்படுத்துவது பற்றி உங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லையெனில், நீங்கள் குடிவரவு வழக்கறிஞருடன் அல்லது Department of Justice (DOJ)-ன் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியுடன் பேசும்படி Office of Immigrant and Refugee Affairs (OIRA) பரிந்துரைக்கிறது. American Immigration Lawyers Associationவாயிலாக உங்களால் ஒரு வழக்கறிஞரைக் கண்டறிய முடியும். அல்லது நீங்கள் DOJ அங்கீகாரம் பெற்ற அமைப்பின் இணையதளத்துக்குச் செல்லலாம்.

அகதிகளுக்கும் குடிவந்தோருக்கும் உதவ OIRA கீழ்க்கண்டவற்றுக்கான திட்டங்களை வைத்துள்ளது:

 • வேலை தேடுதல் மற்றும் பயிற்சி.
 • குடியேற்ற உதவி.
 • இளையோருக்கான வழிகாட்டுதல்.
 • அகதிகளில் வயதானோர், குழந்தைகள், மாணவர்கள் மற்றும் பிறருக்கு உதவி.
 • COVID-19 தொற்றுகாலத்தில் வழக்கமான நிகழ்ச்சிகள் தொலைவழியில் திறந்துள்ளன. வேலைகளுக்கு அல்லது வேலையின்மைக்கு, உங்கள் கல்வியுதவிக்கு மற்றும் வீட்டுவசதிக்கு உதவி வழங்குவதில் உதவிபுரிய புதிய சேவைகளை அலுவலகம் கொண்டுள்ளது. அகதி ரொக்க உதவி மற்றும் அகதி மருத்துவ உதவிக்கான தகுதி செப். 30, 2020வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 • சேவைகள் மற்றும் கூடுதல் தகவல்களுக்கு, அழைக்கவும்: 360-890-0691.

குடியேறியோருக்கான உரிமைகள், தடுத்துவைக்கப்பட்டுள்ள உறவினர்கள்/நண்பர்களுக்கு பரிந்துரை உதவி மற்றும் பிற தொடர்புடைய தகவல்கள் குறித்த கேள்விகள் இருப்பின், நீங்கள் வாஷிங்டன் குடியேற்ற ஒருமைப்பாட்டு வலைத்தொடர்புக்கான பிரத்யேக எண் 1-844-724-3737 ஐ அழைக்கலாம். தொலைபேசி மொழிபெயர்ப்பு வசதிகள் உள்ளன.

மனம் மற்றும் உணர்வு நலம்

இது ஒரு அழுத்தம் தரக்கூடிய நேரமாக இருக்கக்கூடும். நீங்களோ அல்லது உங்கள் அன்பிற்குரியவரோ தவிப்பு, கவலை, பயம் அல்லது கோபம் கொள்வது இயல்பானதே. நீங்கள் தனியாக இல்லை. உதவியைத் தேடி கேட்டுப்பெறுவது சரியானதே.

மன அழுத்தம் மற்றும் கடினமான சூழல்களில் ஒவ்வொருவரும் வெவ்வேறுவிதத்தில் எதிர்வினைபுரிகின்றனர். நீங்கள் செய்யக்கூடியவற்றில் மிக முக்கியமானது உங்களையும், உங்கள் குடும்பத்தையும் உங்கள் சமூகத்தையும் முடிந்தளவு சிறப்பாகக் கவனித்துக்கொள்வதுதான்.

சவாலான நேரங்களை நீங்கள் சமாளிக்க உதவுவது எது? நண்பர்களையும் குடும்பத்தையும் அடைந்து மீண்டும் இணைந்துள்ளீர்களா? ஒருவேளை கொஞ்சம் ஆழ்ந்த மூச்சுவிடுதல், நீட்டி முடக்கல், கொஞ்சம் உடற்பயிற்சி அல்லது ஒரு நல்ல இரவுத்தூக்கம்? சுய பராமரிப்புக்கு நேரம் ஏற்படுத்திக்கொள்வதில் முன்னுரிமை அளியுங்கள். இருப்பினும் அது உங்களைத் தேடிக் கண்டடைவதாயிருந்து, அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

Washington Listensஐ 1-833-681-0211 என்ற எண்ணில் அழையுங்கள். தொலைபேசி மொழிபெயர்ப்பு வசதிகள் உள்ளன. COVID-19 தீவிர தொற்றுக்கு பதிலளிக்கும் விதமாக, Washington Listens என்ற ஆதரவுத் திட்டத்தை வாஷிங்டன் துவக்கியுள்ளது. Washington Listens சேவைகளைப் பயன்படுத்துவோர் COVID-19 காரணமாக ஏற்படும் மாற்றங்களை சமாளிக்கவும் அதிகரிக்கும் அழுத்தத்தைக் கையாளவும் உதவி பெறுகிறார்கள். வாஷிங்டனிலுள்ள யாராயினும் ஓர் ஆதரவு வல்லுநருடன் பேசுவதற்கு Washington Listens உள்ளது. அழைப்பவர்கள் அவர்களது பகுதியிலுள்ள சமூக வளங்களுடன் இணைப்பையும் ஆதரவையும் பெறுகின்றனர். இந்தத் திட்டம் அனாமதேயமானது.

நீங்கள் நெருக்கடியில் இருக்கிறீர்கள், யாரிடமாவது ஆலோசனை பெறவேண்டுமென்ற தேவையிருந்தால், சில வழிகள் உள்ளன.

 • Disaster Distress Helpline இயற்கையான அல்லது மனிதரால் ஏற்படும் பேரிடர் தொடர்பாக எழும் உணர்வுரீதியான அழுத்தத்தை அனுபவிக்கும் நபர்களுக்கு உடனடி நெருக்கடி ஆலோசனை வழங்குகிறது. உதவிக்கு 1-800-985-5990 என்ற எண்ணை அழைக்கவும். அவர்கள் பதிலளிக்கையில், உங்கள் மொழியைச் சொல்லி மொழிபெயர்ப்பு சேவைகளைப் பெறலாம். இந்த பிரத்யேக எண் தினசரி 24 மணி நேரமும் செயல்படும்.
 • தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் உணர்வுரீதியான நெருக்கடியிலுள்ளோரின் நண்பர்களுக்கு உடனடி உதவி வழங்கக்கூடிய 24 மணிநேர நெருக்கடி இணைப்பு எண்ணை Crisis Connections கொண்டுள்ளது. இது King மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு சேவையாற்றுகிறது. தொலைபேசி மொழிபெயர்ப்பு வசதிகள் உள்ளன. அழைக்கவும் 1-866-427-4747.
 • National Suicide Prevention Lifeline தற்கொலை குறித்து சிந்திப்போருக்கு தடுப்பு மற்றும் நெருக்கடி நிலையிலான வாய்ப்புகளை வழங்குகிறது. அன்புக்குரியவரும் அவசர உதவி எண்ணை அழைத்து அவர்களது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு உதவுவதற்கான வாய்ப்பு வளங்களைப் பெறலாம். அழைக்கவும்: 1-800-273-8255. இந்த பிரத்யேக எண் வாரத்தில் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் செயல்படும். முன்னாள் இராணுவ வீரர்களுக்கான தனிப்பட்ட உதவி எண் உள்ளது. 1-800-273-8255 என்ற எண்ணை அழைத்து 1 ஐ அழுத்தவும். காதுகேளாதோர் அல்லது கேட்புத் திறன் குறைபாடுடையோர் 1-800-799-4889 என்ற எண்ணை அழைக்கலாம்.

உணவு வளங்கள்

உங்களுக்கு 18 வயது அல்லது அதற்குக் குறைந்தவயதுள்ள குழந்தையிருந்தால் அவர்கள் பள்ளிக்கூடங்களிலிருந்து இலவச உணவு பெறலாம். கல்வித்திட்டங்களுக்கு பதிந்துள்ள குறைபாடுள்ள வயதுவந்தோருக்கும் பள்ளி உணவுகளைப் பெறும் தகுதியுண்டு. பல சமயங்களில், இந்த உணவுகள் பேருந்து நிறுத்தங்கள் போன்ற பள்ளிக்கூடத்துக்கு வெளியிலுள்ள இடங்களில் பட்டுவாடா அல்லது விநியோகிக்கப்படுகின்றன. உங்கள் மாவட்ட பள்ளியைத் தொடர்புகொண்டு அவர்கள் இலவச உணவு வழங்குகிறார்களா என கண்டறியவும்.

கர்ப்பிணிகள், புதிய தாய்மார்கள் மற்றும் ஐந்து வயதுக்குக்கீழ் உள்ள குழந்தைகள் Department of Health-ன் பெண்கள், கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகள் (WIC) திட்டத்தின் வாயிலாக உணவைப் பெற முடியும். மொழி உதவிக்கு அழைக்கவும்: 1-866-632-9992.

COVID-19 தொற்று காலத்தின் அதிகரித்த உணவு தேவை காரணமாக உணவு வங்கிகளின் நேரங்கள் மாறியிருக்கலாம் அல்லது வருகை தருவோர் அதிகரிப்பினால் மூடப்பட்டிருக்கலாம். செல்வதற்குமுன் தயவுசெய்து அழைக்கவும். Northwest Harvest iஎன்பது மாகாணம் தழுவிய உணவு வங்கி வலையமைப்பு ஆகும். இந்த இணையதளத்தில் பச்சை பெட்டிக்கு இடதுபக்கமுள்ள பெட்டிக்குள் உங்கள் நகரத்தின் பெயரை தட்டச்சிடவும்.

நீங்கள் கிழக்கு வாஷிங்டனில் வசிப்பவர் எனில் Second Harvest-ல் உள்ள உணவு வங்கிகளின் பட்டியலைக் கண்டறியலாம். உங்கள் பகுதியிலுள்ள உணவுவங்கிகளின் பட்டியலுக்கு இந்த இணையதளத்தில் உங்கள் மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

குடும்பங்களுக்கான தகவல்களும் வாய்ப்பு வளங்களும்

மொத்த குடும்பத்துக்குமே இது ஒரு அழுத்தம் தரக்கூடிய நேரம். இந்தச் சூழலை உங்கள் குழந்தைகளோடு எவ்வாறு கையாள்வது என்பதற்கான சில உதவிக்குறிப்புகள் இதோ:

குடும்ப கலந்துரையாடல்களை ஒரு வசதியான இடத்தில் நடத்தி குடும்ப உறுப்பினர்களை கேள்விகள் கேட்க ஊக்குவிக்கவும். சிறு குழந்தைகளிடம் அவர்கள் புரிந்துகொள்ளக்க்கூடிய மொழியைப் பயன்படுத்துவதற்காகவும் அவர்களது பயங்களையும் தவறான எண்ணங்களையும் களையவும் ஒரு தனிப்பட்ட கலந்துரையாடலை நடத்துவது குறித்து யோசிக்கவும்.

தொலைபேசி அல்லது இணையவழி சேவைகள் மூலம் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் தொடர்பில் இருங்கள்.

அவ்வப்போதைய தகவல்களை நீங்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டுமெனினும், பயம் அல்லது பீதியைத் தூண்டும் ஊடகங்கள் அல்லது சமூக ஊடகங்களிடமிருந்து தொடர்பைக் குறைத்துக்கொள்ளுங்கள். தீவிர தொற்று குறித்தவைக்கு எந்தளவு ஊடக உள்ளடக்கம் அல்லது சமூக ஊடக நேரத்தின் மூலம் உங்கள் குழந்தைகள் ஆளாகிறார்கள் என்பது பற்றி விழிப்பு (மற்றும் வரையறுத்தலும்) கொண்டிருங்கள்.

குழந்தைகளை கேள்விகள் கேட்க ஊக்குவித்தும் தற்போதைய சூழ்நிலையை குழந்தைகள் புரிந்துகொள்ள உதவியும் அவர்களுக்கு ஆதரவளிப்பதில் கவனம்செலுத்தவும்.

 • அவர்கள் உணர்வுகள் குறித்து பேசச்சொல்லி அவற்றை உறுதிசெய்யவும்.
 • வரைதல் அல்லது பிற நடவடிக்கைகள் மூலம் அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்த உதவுங்கள்.
 • வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பது பற்றிய தவறான தகவல் அல்லது தவறான புரிதல்களை தெளிவுபடுத்தி எல்லா சுவாச நோய்களும் COVID-19 ஏற்படுத்தக்கூடிய நாவல் கொரோனாவைரஸ் அல்ல என்பதையும் விளக்கவும்.
 • ஆறுதலும் கூடுதல் பொறுமையையும் வழங்குங்கள்.
 • சீரான இடைவெளிகளில் அல்லது சூழ்நிலை மாற்றங்களின்போது உங்கள் குழந்தையை மீண்டும் சோதித்துக்கொள்ளுங்கள்.
 • உங்கள் குடும்பத்தின் படுக்கும் நேரம், உணவு நேரம் மற்றும் உடற்பயிற்சி போன்ற திட்டமிட்ட செயல்பாடுகளை சீராக வைத்திருங்கள்.
 • வேறு அழுத்தமூட்டும் சூழல்களில் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நன்றாக உணரச்செய்த வாசித்தல், திரைப்படங்கள் பார்த்தல், இசை கேட்டல், கேம்ஸ் விளையாடுதல், உடற்பயிற்சி அல்லது மத நடவடிக்கைகளில் ஈடுபடுதல் (பிரார்த்தனை, இணையவழியில் சேவைகளில் பங்கேற்றல்) போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.
 • தீவிர தொற்று போன்ற அழுத்தமூட்டும் சூழலின்போது தனிமையுணர்வு, சலிப்பு, நோயால் பாதிக்கப்படுவோமோ என்ற பயம், தவிப்பு, அழுத்தம் மற்றும் பீதி போன்ற உணர்வுகளை இயல்பான எதிர்வினைகளாக அடையாளம் காணுதல்.
 • உங்கள் குடும்பத்துடன் அர்த்தமுள்ள செயல்பாடுகளிலும் கேளிக்கைகளிலும் சமூக மதிப்புள்ளவைகளிலும் ஈடுபடுத்திக்கொள்ள உதவுங்கள்.

COVID-19 தொற்றினால் தீவிர பாதிப்பு ஏற்படக்கூடிய அதிக அபாயம் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு உள்ளது. உங்களோடு வயதான குடும்ப உறுப்பினர் வசிக்கிறார் எனில், அபாயத்தைக் குறைக்கும் வழிகளைக் கண்டறியுங்கள்.

 • குறைந்த அபாயமுள்ள ஒரு குடும்பத்தை பலசரக்கு வாங்கவும் பிற அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கும் வைத்துக் கொள்ளுங்கள்.
 • வீட்டுக்கு வந்தவுடனேயே ஒவ்வொருவரும் கைகளைக் கழுவுவதை உறுதிசெய்யுங்கள். பகிர்ந்துகொள்ளும் இடங்கள், மேற்பரப்புகள் மற்றும் அறைகளை அடிக்கடி கழுவுங்கள்.
 • உங்கள் வீட்டிலுள்ள ஒருவர் தொற்றுக்கு ஆளாகியிருந்தால் அல்லது அறிகுறிகள் இருந்தால், முடிந்தவரை நன்றாக அவரை தனிமைப்படுத்தவும். அவர்களுக்கென தனி அறையும் குளியலறையும் கொண்டிருப்பது நல்லது. யாருக்கேனும் உடல் நலமில்லை எனில் அல்லது தொற்றும் வாய்ப்பு இருப்பின் பகிர்ந்துகொள்ளும் பகுதிகளை அடிக்கடி சுத்தம் செய்தும் வீட்டிலுள்ளோர் ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிவதையும் உறுதிசெய்ய வேண்டும்.

கூடுதல் வாய்ப்பு வளங்கள் மற்றும் தகவல்கள்