COVID-19ன் போது பாதுகாப்பான கூடுகைகளுக்கான வழிகாட்டி

Multilingual Resources

படம்

தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் இல்லாவிட்டாலும், இந்த குளிர்காலத்தில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஒன்றுகூடுவதற்கு நீங்கள் முன்னேற்பாடு செய்திருந்தால், உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் COVID-19 இல் இருந்து பாதுகாப்பாக வைத்திருக்க என்ன செய்யலாம் என்று சிந்தியுங்கள்.

தடுப்பூசி செலுத்திக்கொள்வது உங்களையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாக்கும் ஒரு சிறந்த வழியாகும், குறிப்பாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியாதவர்களையும் பாதுகாக்கவல்லது. தீவிரநோய் பாதிப்பு மற்றும் இறப்பைத் தடுப்பதில் தடுப்பூசிகள் சிறப்பாக செயலாற்றுகிறது. இருப்பினும், தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் நீங்கள் கூடுகையை முடிவு செய்திருந்தால், நினைவில் கொள்ளுங்கள் COVID-19 தொற்றுப் பரவும் அபாயமும் இங்கே உள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்தல், முகக் கவசங்கள், கைகளை கழுவுதல் மற்றும் நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் வீட்டிலேயே தனிமைப்படுத்தலை மேற்கொள்வது ஆகியவை மற்றவர்களைப் பாதுகாக்க நீங்கள் எடுக்கக்கூடிய சில நடவடிக்கைகளாகும்.

பொதுக் கூடுகைகள்

பொதுவாக, இப்போது பொது வெளியில் நீங்கள் கூடினால்:

  • COVID-19 காரணமாக தீவிரநோய், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் அல்லது இறப்பு ஆகியவற்றிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக்கொள்ளுவதே சிறந்த வழியாகும்.
  • முகக்கவசம் அணிதல். தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறதோ இல்லையோ, ஐந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், அனைத்து உட்புற பொது இடங்களிலும், இசைநிகழ்ச்சிகள் அல்லது விளையாட்டு நிகழ்வுகள் போன்ற 500 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கும் வெளிப்புற கூடுகை நிகழ்வுகளிலும் முகக்கவசம் அணிய வேண்டும். 2 முதல் 4 வயது வரையிலான குழந்தைகளும் முகக்கவசங்களை அணியுமாறு நாங்கள் வலுவாக பரிந்துரைக்கிறோம்.
  • வீட்டிலேயே இருங்கள் உங்களுக்கு உடல்நலம் சரியில்லை அல்லது ஏதேனும் அறிகுறிகள் இருந்தால்.
  • முன்னேற்பாடு செய்தல். முகக்கவசம் அணியாமல் நெரிசலான மக்கள் இருக்கும் மதுக்கடை போன்ற பாதுகாப்பற்ற அல்லது அசௌகரியமானதாக நீங்கள் உணர்ந்தால், நீங்களே வாகனத்தை இயக்கியோ அல்லது வீட்டிற்குச் செல்ல மாற்று வழியைப் பயன்படுத்தியோ உடனே செல்லுங்கள்.

தனிப்பட்ட கூடுகைகள்

ஒரு பொதுக் கூடுகையை தொகுத்து வழங்குவதற்கு முன்பு

  • உங்கள் விருந்தினர் பட்டியலை மதிப்பாய்வு செய்யவும். நீங்கள் யாரை அழைக்கிறீர்கள் என்பதை பற்றி சிந்தியுங்கள். தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதி வரம்பு இல்லாத சிறு குழந்தைகள் உட்பட, COVID-19க்கு அதிக அபாயத்தில் உள்ளவர்கள் இருக்கிறார்களா? உங்கள் விருந்தினர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்களா இல்லையா என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? அதுபற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால், அவர்களிடம் நேரடியாக கேட்பது முக்கியம், அதன்படி நீங்கள் திட்டமிடலாம்.
  • முன்னேற்பாடு செய்தல். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பல குடும்பங்கள் அல்லது COVID-19 நோய்த்தொற்றுக்கு அதிக ஆபத்துள்ள தடுப்பூசி செலுத்தாதவர்கள் இருந்தால், மெய்நிகரில் கூடுவதுதான் பாதுகாப்பான ஒரே தேர்வாகும். நீங்கள் கூடுகையை நேரில் ஏற்பாடுசெய்தால், ஒன்றாக நேரத்தைச் செலவிடும்போது பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுப்பது எப்படி என்பதைப் பற்றி நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தெளிவாக பேசி முன்னேற்பாடு செய்யவும்.
  • பாதுகாப்பாக பயணிக்கவும். குடும்பத்தினருடனோ அல்லது நண்பர்களுடனோ நீங்கள் பயணம் செய்து ஒரு கூடுகையை திட்டமிட்டிருந்தால், தயவுசெய்து CDC பயண வழிகாட்டுதலைப் பின்பற்றவும். அதிக COVID-19 பரவும் பகுதிக்கு நீங்கள் பயணிக்கிறீர்கள் என்றால் எச்சரிக்கையாக இருக்கவும், முகக்கவசத்தை அணிந்துகொண்டு பொது இடங்களில் மற்றவர்களிடமிருந்து 6 அடி (2 மீட்டர்) இடைவெளியை கடைப்பிடிக்கவும்.
  • வெளிப்புறத்திற்கு அழைத்துச் செல்லவும். உட்புற கூடுகைகளை விட வெளிப்புற கூடுகைகள் மிகவும் பாதுகாப்பானவை. நீங்கள் உட்புற கூடுகையை ஏற்பாடு செய்திருந்தால், திறந்த சாளரங்கள் கொண்ட நல்ல காற்றோட்டம் உள்ள இடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • சிறிய கூடுகையாக ஏற்பாடு செய்யவும். உங்கள் வீட்டிற்கு வெளியே உள்ளவர்களுடன் கூடும்போது, சிறிய கூடுகையாக ஏற்பாடு செய்வதே சிறந்தது.
  • குறுகிய கால கூடுகை.  குறுகிய கால கூடுகை COVID-19 பரவுவதற்கான வாய்ப்பையும் குறைக்கின்றன. குறுகிய கால கூடுகை கைகளையும் மேற்பரப்புகளையும் சரியாக சுத்தப்படுத்துவதை எளிதாக்குகின்றன.
  • குழந்தைகளை கவனத்தில் கொள்ளவும். குழந்தைகளுக்கு ஆறு அடி இடைவெளியை கடைப்பிடிப்பதில் சிக்கல் இருக்கலாம், எனவே முகக்கவசம் அணிவதும் கைகளை கழுவுவதும் முக்கியம். நினைவில் கொள்ளுங்கள்: 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணியமாட்டார்கள்! உங்கள் குடும்ப உறுப்பினர் 2 வயதுக்குட்பட்டவராக அல்லது முகக்கவசம் அணிய முடியாதவராக இருந்தால், தடுப்பூசி செலுத்தாத அல்லது தடுப்பூசி செலுத்திக் கொண்டார்களா என்று தெரியாத நபர்களுடனான சந்திப்பைக் கட்டுப்படுத்துங்கள்.
  • உடல்நலப் பரிசோதனை செய்யவும். கடந்த 2 வாரங்களில் யாருக்காவது இருமல், காய்ச்சல் அல்லது மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் இருந்ததா என்று கேளுங்கள். விருந்தினர்கள் வருவதற்கு முன் அவர்களின் வெப்பநிலையைச் சரிபார்க்கச் சொல்லுங்கள். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எவரும் - அல்லது பிற அறிகுறிகள் இருந்தாலோ அல்லது கடந்த இரண்டு வாரங்களுக்குள் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டால் - வீட்டிலேயே இருக்க வேண்டும்.
  • பரிசோதனை செய்துக் கொள்ளவும். தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் இல்லாவிட்டாலும், கூடுகைக்கு 72 மணிநேரத்திற்கு முன்பு நீங்கள் பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைக்கலாம். நிகழ்வுக்கான நாளின்போது வீட்டில் பரிசோதனைகள் செய்யப்படலாம். பரிசோதனையில் தொற்றுப் பாதிப்பு இல்லை என்றாலும், இந்தப் பக்கத்தில் பகிரப்பட்ட பிற பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவது அவசியம்.
  • உங்கள் ஸ்மார்ட்போனில் WA அறிவிப்பைச் சேர்க்கவும். நீங்கள் COVID-19 தொற்றுக்குப் பாதிக்கப்பட்டிருந்தால் இது உங்களை எச்சரிக்கும், மேலும் நீங்கள் தொற்றுக்கு உறுதிசெய்யப்பட்டால் அநாமதேயமாக மற்றவர்களையும் எச்சரிக்கும். WA அறிவிப்பு முற்றிலும் தனி உரிமைப்பட்டது மற்றும் நீங்கள் யார் என்று தெரியாது அல்லது நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பதைக் கண்காணிக்க முடியாது.

தனிப்பட்ட கூடுகையின் போது

  • முகக்கவசங்களை அணியவும். உங்கள் வீட்டிற்கு வெளியே உள்ளவர்களுடன் வீட்டிற்குள் ஒரு கூடுகையை நீங்கள் ஏற்பாடு செய்திருந்தால், பெரும்பாலான பங்கேற்பாளர்கள் முழுமையாக தடுப்பூசி போடாத வரை, அனைவரும் முகக்கவசம் அணியுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. உங்களுடன் உள்ளவர்கள் முகக்கவசங்களை கொண்டுவர மறந்துவிட்டால், கூடுதலாக சில முகக்கவசங்களை கையில் வைத்துக்கொள்ளவும்.
  • கைகளை கழுவுங்கள். கை கழுவும் இடத்திற்கு அணுகல் இல்லை என்றால், கை சுத்திகரிப்பானைக் கொடுங்கள்.
  • இடைவெளியையும் குறைந்த நெருக்கத் தொடர்பை கவனத்தில் கொள்ளவும். உங்களால் முடிந்தவரை 6 அடி இடைவெளியை கடைப்பிடியுங்கள், குறிப்பாக தீவிர COVID-19 அபாயத்தில் உள்ளவர்கள் அல்லது இன்னும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களிடமிருந்து இடைவெளியை கடைப்பிடிக்கவும்.
  • சாளரங்களைத் திறக்கவும். சரியான காற்றோட்டத்தை பெற மக்கள் கூடும் அறைகளில் சாளரங்களைத் திறந்து வைக்கவும்.
  • சுத்தம் செய்தல். ஒன்றுகூடுவதற்கு முன்பும், பின்பும், அடிக்கடி பயன்படுத்தப்படும் மேற்பரப்புகளை கிருமி நீக்கம் செய்யவும்.

தனிப்பட்ட கூடுகைக்கு பின்னர்

  • மறுபடியும் கைகளை சுத்தம் செய்யுங்கள். சோப்பு மற்றும் தண்ணீரில் 20 விநாடிகள் கைகளை கழுவவும்.
  • கிருமிநாசினி. மேசையின் மேல்பரப்பு, கவுண்டர்கள், கதவு கைப்பிடிகள் மற்றும் குளியலறை சாதனங்கள் போன்ற விருந்தினர்களால் தொட்டப்பட்ட அனைத்து மேற்பரப்புகளையும் முதலில் சோப்பு மற்றும் தண்ணீரால் சுத்தம் செய்யவும், பின்னர் கிருமிநாசினியை உபயோகித்து கிருமிநீக்கம் செய்யவும்.
  • ஏதேனும் அறிகுறிகள் ஏற்படுகிறதா என்று கவனியுங்கள். உங்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் ஏற்பட்டால், பரிசோதனை செய்யவும். கலந்துகொண்டவர்களில் எவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டால், கூடுகையில் பங்கேற்ற மற்றவர்களை எச்சரிக்கவும். உங்களுக்கு தொற்றுத் தொடர்பு ஏற்பட்டால், என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி மேலும் அறிக.